வெளிநாட்டில் வேலை இழந்து தாய் நாடு திரும்பி வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நபர்களுக்கு நிவாரண தொகை வழங்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒரே ஆயுதமாக உலகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். தாய்நாட்டில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அவர்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில், கேரளாவில் வெளிநாடுகளில் வேலை இழந்து தவிக்கும் நபர்களுக்கு நிதியுதவி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து நிற்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.