கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மெக்சிகோவில் இளைஞர் ஒருவர் எலும்புக்கூடு போல் உடையணிந்து நடமாடுவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மெக்சிகோவில் இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலிலும் அந்நாட்டு மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதிக்காமல் கடற்கரைகளில் சமூக இடைவெளியின்றி பலரும் சுற்றி திரிகின்றனர்.
இந்நிலையில் அவர்களை எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இளைஞர் ஒருவர் எலும்புக் கூடு போன்ற கருப்பு நிற உடை அணிந்து கொண்டு கையில் கோடாரி போன்ற ஆயுதத்துடன் கடற்கரை பகுதிகளில் அலைந்து திரிகிறார். அவரது மிரட்டலான உருவம் யாருக்கும் அச்சத்தை கொடுக்கவில்லை என்றாலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.