சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்ற மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார்
புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் தவளை குப்பத்தில் உள்விளையாட்டு அரங்கம் பூமிபூஜை ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர், விழா முடிந்து சென்றுகொண்டிருந்தபோது தானம் பாளையம் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தின் அருகே மக்கள் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக நிற்பதைத் பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வந்து மக்களை நோக்கி எதற்காக கூட்டமாக நிற்கிறீர்கள் என கேள்வி கேட்டார்.
மின்சாரம் கட்டணம் செலுத்த நிற்கிறோம் என மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தனது கைபேசி மூலம் உடனடியாக மின் துறை தலைமை பொறியாளரை அழைத்து தொற்று பரவும் காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க விரைந்து பணிகளை முடிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதோடு மக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்குமாறு அறிவுறுத்தினார்.