தங்களின் படைப்புகள் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்கும் வண்ணம் இருக்கும் என்றும், இசை காணொலிகள் தற்போதைய தேவை என்ற அடிப்படையில் புதிய அம்சத்தை பயனர்களுக்கு வழங்க இருப்பதாகவும் ஸ்னாப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- ஸ்னாப்சாட் செயலின் புது அம்சங்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சோதனை செய்யப்படுகிறது
- முன்னதாக, ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலி டிக்டாக் போன்ற தளத்தை ரீல்ஸ் என்று அறிமுகப்படுத்தி இந்தியாவில் சோதனை செய்துவருகிறது
- கூகுள் நிறுவனமும் யூட்யூப் தளத்தின் மூலம் ‘ஷாட்ஸ்’ எனும் குறு காணொலிகள் அம்சத்தை சோதனை செய்துவருகிறது
இதற்கிடையில் டிக்டாக் செயலியை அமெரிக்கா மைக்ரோசாஃப்ட் உதவியுடன் கையகப்படுத்த முனைப்புக் காட்டி வருகிறது. இல்லையேல் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டி வருவது கவனிக்கத்தக்கது.