கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாநிலங்கள் கல்வி நிலையம் திறப்புகான தேதியை அறிவித்து, முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்திலும் வருகின்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக பள்ளிகளை தூய்மை செய்ய வேண்டும். குடிநீர், கழிப்பிட வசதிகளை சரியாக செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த ஏற்பாடுகள் பள்ளிகளில் செய்யப்பட்டு வரும் நிலையில் விரைவில் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.