Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறி… “காதல் திருமணம் செய்த மகள்”… சாப்பிடாமல் இருந்த தாய்… பின் நடந்த சோகம்..!!

தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனவேதனையடைந்த தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி செந்தில் நகர் அடுத்துள்ள நீச்சல் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு ஜனரஞ்சனி பிரியா என்ற மகள் இருக்கிறார். ஜனரஞ்சனி கோவையில் ஓமியோபதி மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்து வருகின்றார்.. அதேபோல தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள பொச்சாரப்படி அன்பழகன் என்பவரின் மகன் விஜய். இவரும் ஜனரஞ்சனி பிரியாவும் காதல் செய்து வந்துள்ளனர். இருவருமே இருவேறு சமூகத்தை சார்ந்தவர்கள்.

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி ஜனரஞ்சனியும் விஜய்யும் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து தங்களது மகள் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போய் விட்டதாக ஜனரஞ்சனி பிரியாவின் பெற்றோர் பரசுராமன் தர்மபுரி நகர போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.. போலீசார் மகள் காணாமல் சென்ற புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜனரஞ்சனியின் குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சரிவர சாப்பிடாமல் தன் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டதால் மன வேதனையிலிருந்த அவரின் தாய் சிவகாமி வீட்டில் இன்று திடீரென்று மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தாய் சிவகாமியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு  செல்லும் வழியிலேயே சிவகாமி பரிதாபமாக இறந்தார்..

இந்தக் காதல் விவகாரம் தொடர்பாக தருமபுரி நகர போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் சிவகாமி இறந்ததாகக் கூறி அவருடைய உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Categories

Tech |