Categories
தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 8 நோயாளிகள் உயிரிழப்பு..!!

அகமதாபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 8 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நவரங்புராவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று  அதிகாலை எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.. இந்த பயங்கர தீ விபத்தில் மருத்துவமனை நோயாளிகள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனிடையே தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மொத்தம் இந்த மருத்துவமனையில் 40 நோயாளிகள் இருந்துள்ளனர்.. உயிர்தப்பிய நோயாளிகள் அனைவரும் அருகிலுள்ள எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Categories

Tech |