நடிகர் ராணா திருமணத்திற்கு வரும் அனைவரும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற தமிழ் படங்களில் நடித்து பாகுபலி படத்தின் வில்லனாக மிரட்டி பிரபலமானவர் நடிகர் ராணா. தெலுங்கு முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். ஹைதராபாத்தில் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து தற்போது திருமணத்திற்கு தயராக உள்ளார் நடிகர் ராணா. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தபின்பு திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்திருந்தனர்.
ஆனால் கொரோனா இப்போதைக்கு ஒழியாதது போல் இருப்பதால் ஆகஸ்ட் 8ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறும் என சமீபத்தில் அறிவித்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒவ்வொருவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திருமணத்திற்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், பிரபாஸ், வருண் தேஜ் போன்ற பலர் இத்திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.