டிக் டாக் செயலியை அமெரிக்கா திருட முயற்சி செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணையத்தளத்தில் மிகவும் பிரபலமாக்கிய டிக் டாக், தற்போது அனைத்து இடங்களிலும் எதிர்ப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் டிக் டாக் செயலுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும் இழப்பாக சீனா கருதி இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவும் தடை விதிப்பதாக கூறி பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.டிக் டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்குவதற்கு அதன் தாய் நிறுவனமாக உள்ள பைட் டான்ஸுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய முடிவுக்கு ஒப்புதல் அளித்த அதிபர் டிரம்ப், வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் முடிந்தாக வேண்டும் இல்லையென்றால் அமெரிக்காவில் டிக் டாக் செயலி முழுவதுமாக தடை செய்யப்படும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
அதனைக் கேட்டு மிகுந்த கோபம் அடைந்த சீனா, சீன தொழில்நுட்ப நிறுவனம் திருடப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் அதற்கு முயற்சி செய்யும் அமெரிக்க அரசுக்கு பதிலடி கொடுப்பதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன என்றும் கூறியிருக்கின்றது. அரசால் அனுமதி அளிக்கப்பட்ட திருட்டில் பங்கேற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் சீனா கூறியுள்ளது. பைட் டான்ஸ் நிறுவனரும் அமெரிக்கா அவசரபடுவதாக கூறியிருக்கின்றார். இருந்தாலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக்டாக்கை கைப்பற்றும் பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறது.