Categories
பல்சுவை

கரீபியன் பிரீமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்பு…. நல்ல தகவலை கொடுத்த தலைமை நிர்வாகி….!!

கொரோனா பரவல் காரணமாக வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணிக்கு இடைவெளி விடப்பட்டுள்ள நிலையில் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.

கொரோனா தொற்று காரணமாக வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்க்கு இடைவேளை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் தற்போது எழுந்து வருகின்றனர். கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டி இந்த மாதம் தொடங்கவுள்ளது. இதன் முதல் நாளில் டிரினிபாகோ நைட் ரைடர்ஸ்,கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் போன்ற அணிகளை செயின்ட் கீட்ஸ் மற்றும் நெவிஸ் உள்ளிட்ட அணிகள் எதிர்கொள்ள உள்ளது.

இதுகுறித்து சிபிஎல் தலைமை நிர்வாகியான டாமியன் ஓடோனோ கூறுகையில்,” கரீபியன் பிரிமியர் லீக் போட்டியானது இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை இரண்டு இடங்களில் நடைபெற உள்ளது. இவற்றில், 23 போட்டிகள் டொபாகோவில் உள்ள டிரினிடாட், துருபாவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி உள்ளிட்ட பகுதிகளில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும். மீதி இருக்கும் 10 போட்டிகள் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவலில் நடைபெறும் எனக் கூறினார்.

Categories

Tech |