Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எண்ணூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்…!!

சென்னையை அடுத்த எண்ணூரில் 10 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூரில் எர்ணாவூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த விபின் குமார் என்பவர் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாம்பாக்கம் விரைந்த போலீசார் அங்கிருந்த கிடங்கில் மூட்டை மூட்டையாக குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து விபின் குமார், ஜின்னா, காவலாளி பார்த்தசாரதி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து இயங்கும் கூட்டாளி முகமது என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |