Categories
அரசியல்

சிறப்பா செஞ்சுட்டு இருக்கோம்… இறப்பு வீதம் குறைஞ்சு இருக்கு… முதல்வர் விளக்கம் ..!!

கொரோனா பரவலைத் தடுக்க அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற முதலமைச்சர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் புதிய கட்டடங்களை திறந்துவைத்தார் பின்னர் 3 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில்  குணமடைவோர் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இறப்பு விகிதம் குறைந்து உள்ளதாகவும் கூறினார். அரசின் அறிவுரைகளை பொதுமக்கள் கடைபிடித்தால் இயல்பு நிலைக்கு திரும்பலாம் எனவும், கொரோனா   பரவலைத் தடுக்க அரசுக்கு  மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் படிப்படியாக பரிசோதனை அதிகரிக்க படுவதாகவும், தமிழகத்தில்தான் அதிகஅளவு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நோய் பரவல் காலத்தில் தமிழகத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி கூடுதலாக வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.

தமிழகத்தில் சிறப்பான முறையில் விவசாயம் நடைபெற்று வருவதாகவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதில் எந்த தடையும் இல்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.  இ பாஸ் நடைமுறையை எளிமையாக மாவட்டங்களில் குழுக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது முகவரியை தெரிவித்து இ- பெறலாம் என்றும் கூறியுள்ளார். இந்த இ-பாஸை மாதம் ஒருமுறை புதுப்பித்து கொள்ளலாம் என்றும் அவர் விளக்கமளித்தார். மகளிர் சுய உதவி குழுவினரோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பு பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

Categories

Tech |