அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ பதிவை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியதற்கு விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில், “குழந்தைகள் அனைவருக்கும் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவர்கள் எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் முதியவர்களுக்கு எத்தகைய நோய் தொற்றையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்றும் பதிவு செய்திருந்தார். ட்ரம்ப் கூறியிருந்த இத்தகைய தகவலுக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில், குழந்தைகள் மூலமாகவும் நோய் தொற்று பரவும். இருந்தாலும் பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகள் குறைவாகவே தொற்றை பரப்புவார்கள் என்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டிரம்ப் கூறியிருந்த தகவல் தவறானது என்று ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் முடிவு செய்து, அவர் வெளியிட்ட வீடியோ பதிவுகளை உடனடியாக நீக்கினர். கொரோனா பற்றி தவறான தகவல்களை பதிவிடுவது தங்களின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு புறம்பானது என பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் செய்தி தொடர்பாளர்கள் கூறியுள்ளனர்.