Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை துறைமுகம் அருகே 740 டன் மருந்து தேக்கிவைப்பு…. லெபனான் வெடி விபத்தால் அதிகரித்த அச்சம்….!!

லெபனானை போல சென்னையிலும் அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற துறைமுக சுங்கத்துறை ஊழியர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

லெபனானில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 100 பேர் இறந்த நிலையில் லெபனானை போல சென்னையிலும் துறைமுகம் அருகே 740 டன் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் குடோனில் வைக்கப்பட்டுள்ள இந்த அமோனியம் நைட்ரேட்டால் துறைமுக ஊழியர் மட்டுமல்லாமல் வடசென்னை பகுதி மக்களும் அச்சமடைந்துள்ளனர். அதனை உடனடியாக அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம்  கடந்த 2015 ஆம் ஆண்டு கொரியாவில் இருந்து 740 டன் அமோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்தது. உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்ததாக  கூறி அது பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. லெபனானிலும் ஆறு ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டிருந்த மருந்துதான் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதேபோலவே சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள மருந்தும் ஆறு ஆண்டுகளை நெருங்கிவிட்டதே அச்சத்திற்கு காரணம்.

Categories

Tech |