வட கொரியா நாட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு தற்போது வரை முடிவுகள் வெளிவராத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சந்தேகத்தின் பெயரில் முதல் நபராக ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை அவருக்கு சோதனை முடிவுகள் என்னவென்று தெரியவில்லை. மேலும் முதல் கட்டம் மற்றும் இரண்டாவது கட்டத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த 3,635 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தகவல் அளித்துள்ளது. வடகொரியாவின் எல்லைப்புற நகரமான கேஸாங் பகுதியில் கடந்த ஜூலை 26ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று வருடங்கள் கழித்து தென் கொரியா நாட்டிற்கு திரும்பிய ஒருவர், எல்லை வழியாக செல்லும்போது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் வடகொரியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதுபற்றி அதிபர் கிம் ஜாங் உன் கூறும்போது, “கொடிய வைரஸ் நாட்டுக்குள் நுழைந்து இருப்பதாக கூறலாம்” என்று கூறியிருந்தார். மேலும் வெளியான தகவல் உறுதி செய்யப்பட்டால், அதுவே அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமான முறையில் அறிவிக்கப்படும் முதல் கொரோனா தொற்று எனலாம்.