கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஆறு மாதங்கள் ஆகியும் இன்றும் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி நீடிக்கிறது ? ஒவ்வொரு மாநிலங்களும் மாநிலத்திற்கு தன்மைக்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்கள் கல்வி நிலையம் செய்யப்படும் தேதியையும் அறிவித்து விட்டனர்.
ஆனால் தமிழகத்தில் அதிகப்படியான கொரோனா தொற்று இருப்பதால் கல்வி நிலையங்கள் திறப்பு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இன்று வரையில் பள்ளிக்கூடம், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று முடிவு செய்யாமல் இருக்கிறது. இதனிடையே பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசும்போது, கொரோனா படிப்படியாக குறைந்தது மக்களின் கருத்து கேட்டு பள்ளிகள் திறக்கப்படும். தற்போதைக்கு பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.