Categories
உலக செய்திகள்

கணவனை கொன்று…. உடலை துண்டு துண்டாக்கி…. உப்பு போட்டு பிரிட்ஜில் வைத்த மனைவி…..!!

தினமும் குடித்துவிட்டு துன்புறுத்திய கணவனை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த மனைவி, இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யாவில் மிகவும் பிரபலமான பாப் இசை பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ. இவருக்கு மெரினா குஹா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில் அலெக்சாண்டர் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியை துன்புறுத்தி இருக்கிறார். இதனால் மன அழுத்தம் அடைந்த குஹா கணவனை கொன்றுவிடலாம் என முடிவு செய்து கத்தி, சுத்தியல், ரம்பம் போன்றவற்றை கொண்டு கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, தனது 2 வயது குழந்தையின் கண் முன்னே இந்த கொலையை செய்து இருக்கிறார்.

அதன்பின் வெட்டிய உடல் பாகங்களை வாஷிங் மெஷினில் போட்டு நன்கு கழுவி எடுத்து உப்பு போட்டு, ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். அதன்பின் வீட்டை நன்றாக சுத்தம் செய்து, வழக்கம் போல் தனது வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளார். இதனிடையில் அலெக்சாண்டருக்கு அவரது நண்பர்கள் தொடர்ந்து செல்போனில் அழைப்பு விடுத்துள்ளனர். அவர் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, அலெக்சாண்டர் வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் குஹாவிடம் விசாரணை நடத்தியதில், கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் போதையில் சித்ரவதை செய்ததால் தான் கொன்றதாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |