உலகில் கொரோனாவை எப்போதும் ஒழிக்க முடியாது என்று அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் மருத்துவர் அந்தோணி பவுசி கொரோனா பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், கொரோனாவை ஒழிக்க உலகிலுள்ள எவராலும் முடியாது. தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும். இதனை அவ்வளவு சீக்கிரமாக ஒழிக்க முடியாது. ஏனென்றால் இது மிக பயங்கரமான தொற்றுநோய் , இதனை ஒழிப்பது என்பது எவ்வகையிலும் சாத்தியமில்லாத செயல் என்று நான் கருதுகிறேன்.
இருந்தாலும் ஒரு நல்ல தடுப்பூசி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளில் கவனம் கொள்வதன் மூலமாக நாம் கொரோனாவை ஒழிக்க இயலும் என நினைக்கிறேன். அடுத்த ஆண்டிற்கு பின்னர் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும். அடுத்த 2021 ஆம் ஆண்டில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.