ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள புளியம்பட்டி வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படை ரூ :77 ஆயிரம் பறிமுதல் செய்து தாசில்தார் கணேசனிடம் ஒப்படைப்பு.
ஈரோடு மாவட்டத்திலுளா அந்தியூர் அருகே அத்தாணி எனும் பகுதியில் வாகனசோதனையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு ஏற்றும் வண்டியினை சோதனை செய்தபோது சின்னராஜ் 46 என்பவர் இவர் புளியம்பட்டியை சார்ந்தவர் இவர் புளியம்பட்டியில் இருந்து அந்தியூர் வழியாக அருகிலுள்ள சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்கசெல்வதாகவும் அதற்கு 77 ஆயிரம் கொண்டு வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
முறையான ஆதாரம், ஆவணம் எதுவும் இல்லாததால் பறக்கும் படையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தார் கணேசனிடம் ரூ .77 ஆயிரம் ஒப்படைக்கப்பட்டது.