பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோர்கள் கிணற்றில் தூக்கி எறிந்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ள யெல்லாபுரம் வட்டத்தின் சஹஸ்ராலி கிராமத்தில் வசிப்பவர், சந்திரசேகர பட் -பிரியங்கா பட். இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 2ம் தேதி, அடையாளம் காண முடியாத நபர் ஒருவர் தங்கள் ஒரு மாத பெண் குழந்தையைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டதால், தங்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் கூறி, யெல்லபுரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து, காவல் துறையினர் கிணற்றில் இருந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
அதன்பின் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையின் பெற்றோர்கள் மீது சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணையை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் குழந்தையின் பெற்றோர்கள், பிறந்த குழந்தை பெண்ணாக இருந்ததால் கிணற்றில் தூக்கி எரிந்து விட்டதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து யெல்லபுரா காவல் துறையினர், அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பெற்ற குழந்தையை கிணற்றில் தூக்கி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.