Categories
உலக செய்திகள்

2 மாத இடைவெளி…. மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா… சுகாதார துறை தகவல்…!!

இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட விவரங்களின்படி, அங்கு 24 மணி நேரத்தில் 1,695 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது, இந்த எண்ணிக்கையானது மே 30ம் தேதிக்குப் பிறகு பதிவான மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஆகும். மே 30ம் தேதி அன்று பிரான்ஸ் நாட்டில் கிட்டத்தட்ட 1,828 கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருந்தது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டு வந்தாலும் மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை சென்ற 24 மணி நேரத்தில் குறைந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளன. மேலும் நாட்டில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30,305 ஆக இருக்கிறது. ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 3 வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.

Categories

Tech |