தமிழ்நாட்டில் வரும் நவம்பர் மாதத்தில் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் மிகவும் தாகமாக திறக்கப்படுவதால் இந்த ஆண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளி கல்வி அதிகாரிகள் வட்டாரம் கூறியுள்ளது. மாறாக நேரடியாக முழு ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் 30% பாடங்களை குறைக்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதால் அதுபற்றியும் வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது.
தனியார் பள்ளிகள் ஏற்கனவே ஆன்லைன் கல்வி முறையை தொடங்கிவிட்ட நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என்று வெளியான தகவலை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.