Categories
மாநில செய்திகள்

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் – ஸ்டாலின் மடல்

தமிழகத்தில் திமுக ஆட்சியை உருவாக்கி கலைஞருக்கு காணிக்கையாக செலுத்தும் வரை ஓய்வின்றி உழைப்போம் என்று கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளளார்.

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில் கட்சித் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கலைஞரின் சாதனைகளையும், ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்துள்ளார். கலைஞரின் ஆற்றலை கொண்டு மக்களிடம் செல்வோம். கலைஞர் படைத்த சாதனைகளையும், அதன் பயன்களையும் மக்களிடம் சொல்வோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் ஜனநாயகத்தை பலி கொடுக்கும் சக்திகளை மக்களுக்கு தொண்டர்கள் அடையாளம் காட்ட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். நெருக்கடிக்கு அஞ்சாமல், திசை திருப்புதல்களில் சிக்காமல், கொள்கையில் வலிமையுடன் பயணித்து தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதுவரை தொண்டர்கள் அயராது உழைக்குமாறு முக. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |