Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டிய மர்ம நபர்கள்…!!

சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற மூன்று பேரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

அயனாவரம் பாளையம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற சதீஷ், இவர் கோபிகிருஷ்ணா திரையரங்கம் எதிரே, ஆதவன் என்கிற சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டிற்கு தேவையான சரக்குகளை வாகனத்திலிருந்து இறக்கி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் சரவணனை கத்தியால் வெட்டினர். இதில் நிலைதடுமாறிய சரவணன் சுதாரித்துக் கொண்டு உடனடியாக அவர்களை எதிர்த்து தாக்க முயற்சி செய்தார். மேலும் அருகில் இருந்த கடையில் வேலை பார்க்கும் ஆட்களும் தாக்குதல் நடத்தி இளைஞர்களை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர்.ஆனால் இளைஞர்கள் மூவரும் கத்தியை கான்பித்து தப்பி சென்று விட்டனர்.

Categories

Tech |