பரமக்குடி அருகே சுவர் பிரச்சினை காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டையல் தெருவைச் சேர்ந்த துரைராஜ் மற்றும் பாலுகரசு வீட்டிற்கு இடையிலான சுவர் பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இதில் கடந்த ஆண்டு துரைராஜ் என்பவருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் பாலுகரசு ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் துரைராஜ் மற்றும் அவரது மகன் கூடலிங்கத்தை தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற கூடலிங்கம் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இளைஞரின் கொலை தொடர்பாக ஜல்லி முருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். உயிரிழந்த கூடலிங்கத்திற்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.