லெபனான் வெடிவிபத்தில் ஜெர்மன் தூதரக பெண் அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் வெடிவிபத்தில் ஜெர்மன் தூதரக பெண் அலுவலர் உயிரிழந்த தகவலை ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் Heiko Maas வெளியிட்டிருக்கிறார். அவர் “நாம் பயந்தது போலவே ஆகிவிட்டது. பெய்ரூட் வெடிவிபத்தில் எனது குடியிருப்பில் வசித்து வந்த நமது தூதரக அலுவலர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். நமது சக ஊழியரின் இறப்பு நமது வெளியுறவு அமைச்சக ஊழியர்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி உயிரிழந்த ஊழியரின் உறவினர்களுக்கும் மற்ற அவர் பிரிவால் வாடும் ஊழியர்களுக்கும் தனது இரங்கலை கூறியுள்ளார். பெய்ரூட் வெடிவிபத்தில் 130 பேர் உயிர் இழந்தது மட்டுமல்லாமல் ஐந்தாயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.