பிரபல நடிகர் ஒருவர் விஜயின் புலி படத்திற்கு பிறகு அவரின் ரசிகர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயந்ததாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் அதிகம் கொண்டாடும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய். இவருக்கு என்று லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறார். விஜய்யின் ரசிகர்களும் அவருடைய படத்திற்காக காத்திருக்கின்றனர். விஜய் திரைப்பயணத்தில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் புலி. இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இப்படத்தின் ஓப்பனிங் காட்சியானது விஜய் ஒருவரின் காலை பிடிப்பது போல் இருக்கும், அந்த காட்சியில் சம்பத் ராம் என்ற நடிகர் நடித்திருந்தார். அந்த காட்சி நடித்து முடித்த பின் விஜய் ரசிகர்கள் என்னை கொன்றே விடுவார்கள் என்று நினைத்து பயந்தேன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் சம்பத் ராம் கூறினார். ஆனால், நான் நினைத்தது போல் இல்லை.. ரசிகர்கள் இன்று வரை தன்னிடம் அன்பாக தான் நடந்து கொள்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.