Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் வளர்ச்சிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!!..திமுக வேடப்பாளர் அதிரடி பேச்சு!!…

 உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று ஆர்.டி .சேகர் உறுதியளித்துள்ளார்

மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பெரம்பலூர் மக்களவை தொகுதியின் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி  வேட்பாளர் ஆர்.டி.சேகர் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வந்தார்

பிரச்சாரத்தில்  உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி  வாக்கு சேகரித்தார். கலைஞர்கருணாநிதி அவர்கள்  விட்டு சென்ற கடமைகளை தவறாமல் நிறைவேற்ற தயாராக இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி அமைய அவரது ஆதரவில் நிற்கும் எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பேசினார்

மேலும் பெரம்பலூர்  தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த  ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதனை அடிப்படையில் படிப்படியாக திட்டங்களை  நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என ஆர்.டி.சேகர் பிரச்சாரத்தில் உறுதியளித்தார்.

அவருடைய இந்தப் பிரச்சார பயணத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து உள்ள பிற தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்

Categories

Tech |