Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…எதிர்பாராத நன்மைகள் உண்டு…கோபத்தை தவிர்க்கவும்…!

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று தொழிலில் தன்னம்பிக்கையும் மனதில் மகிழ்ச்சியும் கூடும். வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை எய்திய வருமானத்தை கூட்ட முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தி ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கள் என்பது கிடைப்பது ரொம்ப அரிதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை கொடுக்கலாம்.

கவனமாக இருங்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவது தவிர்க்க வேண்டும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தயவுசெய்து பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம். கோபத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். பூர்விக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபங்கள் ஓரளவு தாமதமாக வந்து சேரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பாராத நன்மைகள் இன்று நடக்கும்.

காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |