ஆகஸ்ட் 12 முதல் பி.இ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுமென்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்க கூடிய பொறியியல் கல்லூரிகள் கல்வியாண்டுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் அவர்களுக்கான (இந்த பருவத்திற்கான) வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான சூழல் இல்லாத காரணத்தினால் அந்த வகுப்புகள் அனைத்துமே இணைய வழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 12ம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் வரைக்கும் இந்த பருவம் என்பது நடைபெறும் என்றும், அடுத்த பருவம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி தொடங்கும் என கூறப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே அக்டோபர் மாதத்திலேயே அவர்களுக்கான செய்முறை தேர்வு நடைபெறும், N செமஸ்டர் என்று சொல்லக்கூடிய பருவத்தேர்வு என்பதும் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த அட்டவணையில் குறிப்பிடப்படுகிறார்கள். மேலும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள். ஏனெனில் பல நாட்களாக வகுப்புகள் நடைபெற காரணத்தினால் சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இணைய வழி வகுப்பிற்கான அட்டவணை என்ன என்பது குறித்த விவரமும் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
பொறியியல் கல்லூரிகளை பொருத்தவரை கடந்த மார்ச் மாதத்திலிருந்து கல்லூரிகள் இயங்கவில்லை. பருவத்தேர்வு இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தற்போது பருவத்தை இணைய வழி நடத்துவதற்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.