தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் நிலையில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கும் கருத்தாக… பள்ளி திறப்பு குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது. கொரோனா முடிந்த பிறகு, பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இருந்தும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் கல்வி காலதாமதம் ஆவதால் இந்த கேள்வி தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் 10ஆம் தேதி முதல்வர் அறிவிப்பார். கொரோனா குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.