Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 150 பேரிடர் மீட்பு குழுவினர் 6 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 250க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குறிப்பாக எமரால்டு, எடக்காடு, கக்கன்ஜி காலனி மற்றும் கூடலூரில் தேன்வயல், புத்தூர் வயல், பூரணமாய் வயல் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக தங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாம்களை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசன்ட் திவ்யா 8ஆம் தேதி வரை கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவலாஞ்சி பகுதியில் மழை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |