Categories
உலக செய்திகள்

“சீனா விதிமுறைகளை மீறி விட்டது”- அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

உலக வர்த்தக அமைப்புக்குள் சீனா நுழைந்தது மிகவும் மோசமான செயல் என்று அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை வர்த்தக போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் சீனாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படக் கூடிய வரித் தொகையை அதிபர் டொனால்டு டிரம்ப் பல மடங்குகள் உயர்த்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில், அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியை சீனா பல மடங்குகள் உயர்த்தியது. இந்நிலையில் வர்த்தக போர் மிகவும் தீவிரமடைந்து கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதிலும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனாவிற்க்கு பலியாகியுள்ளனர். அதனால் சீனாவின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு அதிக கோபம் ஏற்பட்டது.

அதன் வெளிப்பாடாக சீனா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக மோதலை அதிகரிக்கக் கூடிய விதத்தில் உலக வர்த்தக அமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் சீனா அதனுடைய விதிகளை மீறியதாக அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இதுபற்றி வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசும்போது,’உலக சுகாதார அமைப்புக்குள் சீனா நுழைந்தது இதுவரை உள்ள ஒப்பந்தங்களில் மிகவும் மோசமான செயல். உங்களுக்கு உண்மை தெரிய வேண்டுமென்றால்…. அந்த அமைப்பில் தற்போது வரை எந்த நாடும் மீராத விதிமுறைகளை சீனா  மீறி விட்டது’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |