Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்…!!

கொரோனா வைரஸ் குணப்படுத்துவதாக கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட  முயன்றதாக கூறி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை திருவமையூர் ஊரை சேர்ந்த ஆர்ருத்தார் என்ஜினியஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் வணிக சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான மனுவில் கொரோனாவின் பெயரை பயன்படுத்த, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனதிற்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த, பதஞ்சலி நிறுவனதிற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சிபி கார்த்திகேயன் கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த, பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தார். மேலும் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டு பிடித்துள்ளதாக சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாக கூறி, அன்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Categories

Tech |