சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் போரம்தியோ என்ற வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் விசாரணையை தொடங்கினர்.. இந்த விசாரணையில், காட்டெருமை சுற்றித்திரிந்த பகுதியில் இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் இது வேட்டையாடுபவர்களின் செயலாக இருக்கும் என்று சந்தேகமடைந்த வனத் துறையினர், அச்சனக்மார் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஸ்னிஃபர் நாய்கள் உதவியுடன் வேட்டைக்காரர்களைக் தீவிரமாக தேடும் வேட்டையில் களமிறங்கினர். அதில், நந்தினி மற்றும் குமன் கிராமங்களைச் சேர்ந்த 9 பேர் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறிய காட்டு விலங்குகளை உணவுக்காக கொல்ல இரும்பு கம்பியை வைத்தோம். ஆனால், எதிர்ப்பாராத வகையில் காட்டெருமை கரெண்ட் கம்பியில் சிக்கி இறந்து விட்டது என குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.