பிரபல நடிகர் சோனு சூட் சிறுவனின் கோரிக்கை ஒன்றை நிராகரித்த சம்பவம் அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபபத்தில் மிக அதிகமாக பேசப்பட்டு வரும் பிரபல நடிகர் என்றால் அது சோனு சூட் தான். அதற்கு காரணம் அவர் சிறந்த நடிகர் என்பதும், ஏராளமான நபர்களுக்கு தெரிந்த முகம் என்பதும் கிடையாது. இந்த ஊரடங்கு காலத்தில் அவர் பிரபலம் அடைய காரணமாக இருந்தது, அவருடைய நல்ல எண்ணம்தான். இதுவரையில் அவர் சினிமா மூலம் சம்பாதித்த அனைத்து பணத்தையும் பாரபட்சமின்றி கஷ்டப்படும் பொதுமக்களுக்கு தொடர்ந்து உதவ பயன்படுத்தி கொண்டு வருகிறார். நாள்தோறும் செய்திகளை படித்து அதில் கஷ்டப்படுகிறார்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.
அதேபோல் அவரை நேரடியாக சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு உதவி கேட்கும் நபர்களுக்கும் அவர் உதவி செய்து வருகிறார். அந்த வகையில், இதனை பார்த்த சிறுவன் ஒருவன் அவரிடம் விளையாடுவதற்கு பிஎஸ்4 ரக வீடியோ கேம் வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சோனு சூட் ps4 இல்லாததால் நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றும், அதற்கு பதிலாக நல்ல புத்தகங்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்திருந்தார். அந்த சிறுவனின் கோரிக்கையை சுலபமாக அவரால் நிராகரித்து இருக்க முடியும். ஆனால் அவர் வாங்கி தர மறுத்ததோடு அதற்கான காரணத்தையும் கூறி சிறுவனை நல்வழிப்படுத்த அவர் மேற்கொண்ட செயல் பொதுமக்களிடையேயும் அவருடைய ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.