Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தலா ரூ.5000 – முதல்வர் அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் ஆய்வு பணியை துவங்கியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் ஆய்வு பணிகளை முடித்து இன்று தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தடுப்பு பணிகள் குறித்து பேசிய தமிழக முதல்வர் பின்னர் செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக தற்போது இ-பாஸ் சாத்தியமில்லை என்று தெரிவித்த முதலமைச்சர்… தமிழகம் முழுவதும் இருக்கின்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவசர கால நிதியாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |