Categories
மாநில செய்திகள்

“ஆகஸ்ட் 10” மிஸ் பண்ணிடாதீங்க….. பள்ளி மாணவர்களுக்கு….. முதல்வர் முக்கிய அறிவிப்பு…!!

பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய தகவலை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பல சினிமா தியேட்டர்கள், மால்கள், கல்வி வளாகங்கள் என அனைத்திற்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

அதே போல், கொரோனா குறைந்த பிறகே பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் பத்தாம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளி திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் மீண்டும் ஒருமுறை கருத்தை பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |