Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பேரிடரில் தொடர் வழிப்பறி …!!

சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஆயுதங்களால் தாக்கி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆழ்வார்பேட்டையில் சிவி ராமன் சாலையில் சவாரி செல்வதற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் என்பவரை தாக்கி 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர் அளித்த புகார் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிசார் வழிப்பறி செய்த நபர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக திருவான்மியூரை சேர்ந்த விஜயகுமார் அடையாறு ராமு மற்றும் யுவராஜ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை சாந்தோம் அருகே நடந்து சென்ற இளைஞர் ஒருவரை ஆயுதங்களால் தாக்கி பணம் பறித்ததாக தெரிவித்துள்ளனர். மயிலாப்பூர் சேர்ந்த பாஜக நிர்வாகி சந்தானம் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பத்தாயிரம் ரூபாய் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |