நடிகை கஸ்தூரி தமிழ் திரையுலகின் வாரிசு அரசியல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்குபின் வாரிசு அரசியல் சர்ச்சை தலைதூக்கி வருகிறது. நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் சுஷாந்தின் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் குறித்து பாலிவுட்டில் பேச்சு எழுந்ததும், மத்திய திரையுலகிலும் வாரிசு அரசியல் குறித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார். தமிழ் திரையுலகில் நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் மீது மீரா மிதுன் கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார். அவரின் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. தற்போது வாரிசு அரசியல் குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது ” தமிழ் திரையுலகம் ஒரு அற்புதமான இடம். இங்கு வாரிசு அரசியலோ, மாஃபியாகளோ, கூடாரங்கலோ என்றும் சாத்தியமற்றது. உண்மையில் திரைத்துறை சார்ந்த குடும்பத்திலிருந்து வருபவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் அவர்களின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
அதை பூர்த்தி செய்ய அவர்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றி பெற இரண்டு விஷயங்கள் மட்டுமே உங்களுக்கு உதவும். அதிக திறமை மற்றும் சிறிது அதிர்ஷ்டம். இது அனைவருக்கும் பொருந்தும். அவர்கள் எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. நடிகர் விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் அதிக உழைப்பினாலும் அர்ப்பணிபினாலும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் வெற்றிக்கும் பின்புலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நடிகர் அஜித், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றோர் பின்புலம் இல்லாமல் அதிக திறமையால் வெற்றி பெற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுகள். திறமையற்ற தொழில் முறையற்ற தோற்றவர்கள் மட்டுமே கோலிவுட்டில் சதிகள் குறித்தும், வாரிசு அரசியல் குறித்தும் கற்பனை செய்து குறை கூறுவார்கள் ” என நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.