போனில் நடிகை குஷ்பூ இருக்கு பாலியல் மிரட்டல் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளத்தில் அரசியல் குறித்தும், சமூக விஷயங்கள் தொடர்பான பதிவுகளையும் தொடர்ந்து நடிகை குஷ்பூ பதிவிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு தனக்கு பாலியல் வன்முறை ரீதியாக மிரட்டல் வந்திருப்பதாக கூறி மிரட்டிய நபரின் செல்போன் நம்பரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த எண்ணிலிருந்து எனக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் வருகிறது.
இந்த அழைப்பு கொல்கத்தாவில் இருந்து வந்துள்ளது. மிரட்டல் விடுத்தவர் பெயர் சஞ்சய் சர்மா என வருகிறது. இதுகுறித்து கொல்கத்தா காவலர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதை மம்தா பானர்ஜி கவனிக்கவேண்டும். எனக்கு இதுபோன்ற மிரட்டல்கள் என்றால் மற்ற பெண்களின் நிலையை நினைத்து பார்க்கவேண்டும் என பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.