திண்டுக்கல் மாவட்டத்தில் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் அந்த ஊர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச சேர்ந்தவர் செல்லப்பா விவசாயி. இவர் நேற்று இரவு தனது தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி விட்டனர் இதனையடுத்து காலையில் செல்லப்பாவை ரத்த வெள்ளத்தில் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர் அருகில் சென்ற போது அவர் இறந்து தெரியவந்தது
இதனையடுத்து நத்தம் போலீசாருக்கு ஊர் மக்கள் தகவல் அளித்தனர் . அதன் பின் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் பின் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்
விசாரணையில் செல்லப்பாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து செல்லப்பா முன்விரோதம் ஏற்பட்ட நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் செல்லப்பா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு கைரேகை நிபுணர்களை அழைத்து தடயங்கள் இருக்கிறதா என சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்