Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10 கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா …!!

விழுப்புரம் அருகே ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 10 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் உள்ள ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மீன்பிடி திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதில் நத்தமேடு திருவாக்கூர், கல்பட்டு, மாம்பழப்பட்டு, ஒட்டன் காடு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு மீன் பிடித்தனர். கெண்டை மீன், கெளுத்தி, குரவை, விரால் மீன்களை மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |