ஆந்திர மாநிலத்தில் தானாக மூடிக்கொண்ட காரில் சிக்கிக்கொண்ட 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தில் வசித்து வருகின்றனர். அவர்களின் 3 குழந்தைகளுக்கு 6 முதல் 8 வயது வரை இருக்கும். அந்தக் குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு காருக்குள் சென்று அமர்ந்துள்ளனர். அதன் பிறகு காரின் கதவுகள் தானாகவே மூடிக் கொண்டன. பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் காரின் கதவுகளை திறப்பதற்கு சிறுமிகள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவுகள் திறக்கப்படாத நிலையில் குழந்தைகள் மூவரும் மயக்கம் அடைந்துள்ளனர்.
அவர்களின் பெற்றோர் பல்வேறு இடங்களில் சிறுமிகளை தேடிய பின்னர், காருக்குள் சிறுமிகள் நினைவிழந்து கிடப்பதை கண்டனர். அதன் பிறகு பெற்றோர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் காரில் இருந்த அஸ்பனா, யாஸ்மின் மற்றும் பர்வீன் ஆகிய மூன்று குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மூன்று குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காரின் உரிமையாளர் கதவுகளை மூடவில்லை என்று கூறியுள்ளார்.