நடிகை நயன்தாராவின் ஒரு படத்திற்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் அதிக சம்பளம் வாங்குபவர் என பெயர் பெற்றவர். ஒரு படத்திற்கு அவருடைய சம்பளம் மூன்று முதல் மூன்றரை கோடி என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அவ்வளவு சம்பளம் கொடுத்து மலையாளத்தில் எந்த ஹீரோயினையும் நடிக்க வைக்க மாட்டார்கள். எனவே நயன்தாரா தமிழில் தான் அதிக படங்களில் நடிக்கிறார். தெலுங்கில் நடிக்க ஏனோ அவர் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. அவருக்கு அங்கு அதிக சம்பளம் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.
இருப்பினும் சீனியர் ஹீரோக்களுடன் மீண்டும் இணைவதை நயன்தாரா விரும்பவில்லை என்கிறார்கள். தெலுங்கில் வெளிவந்த ‘ பீஷ்மா’ என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ என்ற படத்தின் ரீமேக்கில் நிகில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் வரும் தபு எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நயன்தாராவிடம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அவரிடம் பேசியபோது 4 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டாராம். நீக்கி குடும்பத்தினரே இப்படத்தை தயாரிக்க இருப்பதால் அவ்வளவு சம்பளம் தர தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.