விளையாட்டு வீரர் சுரேஷ் ரெய்னா களமிறங்கும் வரை காத்திருக்க வேண்டாம் உடனே பயிற்சியில் ஈடுபடுங்கள் என உற்சாகமாக பதிவிட்டுள்ளார்.
சுரேஷ் ரெய்னா சக வீரர்களுக்கு களம் இறங்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக தீவிர பயிற்சியில் இறங்குங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் இருக்கும் விளையாட்டு அரங்கில் பயிற்சியை மேற்கொண்ட ரெய்னா தன்னுடைய பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். அத்துடன் “நான் மிகவும் விரும்புவதை செய்கிறேன் கடினமான பயிற்சி செய்யுங்கள் போட்டிக்குத் தயாராகுங்கள். களம் இறங்கும் வரை காத்திருக்க வேண்டாம் ” என கூறியுள்ளார். ஐ.பி.எல் தொடரை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ள ரெய்னா சென்னை அணியின் முக்கிய வீரர் ஆவார். இதுவரை ஐபிஎல் தொடரில் நடந்த 193 போட்டிகளில் 5368 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுவதற்கும் சென்னையில் விளையாடுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளது. அங்குள்ள வானிலை மற்றும் சூழ்நிலை எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். அதிக வெப்ப நிலை ஏற்படும் போது விக்கெட்டுகளை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் கவனம் இருக்க வேண்டும். அதற்கேற்ப திட்டமிட்டு விளையாட வேண்டும். போட்டிகள் நடைபெறும் அபுதாபி, துபாய், ஷார்ஜா போன்ற இடங்களுக்கான பயண நேரம் மிகக்குறைவு எனவே ஓய்வு எடுப்பதற்கும் திட்டமிடுவதற்கு போதுமான நேரம் கிடைக்கும் என ரெய்னா தெரிவித்துள்ளார்.