Categories
உலக செய்திகள்

விளையாட்டாக நடந்துச்சு…!! ”ரூ.93,81,337 கிடைச்சுச்சு” அள்ளிய அதிஷ்டசாலி …!!

ஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டு வாங்கிய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அமெரிக்க நாட்டிலுள்ள வர்ஜீனியாவை சேர்ந்த ரேமன் ஹாரிங்டன், சென்ற ஜூலை மாதத்தில் அங்கு உள்ள கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள லாட்டரி சீட்டு கடைக்கு சென்று ஒரே குலுக்கலுக்காக, ஒரு அமெரிக்க டாலர் மதிப்புள்ள 25 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். அவர் வாங்கியுள்ள லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ஹாரிங்டன் மட்டுமில்லாமல் அங்கு கூடியிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர்.

அவர்கள் ஆச்சரியத்தில் உறைந்ததற்கான காரணம் என்னவென்றால், ஹாரிங்டன்  வாங்கிய 25 லாட்டரி சீட்டிற்கும் பரிசு விழுந்துள்ளது. அதாவது ஒரு சீட்டிற்கு 5000 அமெரிக்க டாலர் என்ற விதத்தில் மொத்தம் 125000 அமெரிக்க டாலர்களைை வென்றிருந்தார். இந்த அதிர்ஷ்டம் குறித்து ஹாரிங்டன் கூறுகையில், “ஏனோ தெரியவில்லை 25 சீட்டுகளை வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஒரு விளையாட்டு முயற்சியாக தான் இதை செய்தேன். ஆனால் இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. இதில் கிடைத்துள்ள பணத்தை வைத்து எனது குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பயன்படுத்த உள்ளேன்” என அதிர்ஷ்டசாலியான ஹாரிங்டன் கூறியுள்ளார்.

Categories

Tech |