Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் மீண்ட துப்புரவு பணியாளர்…. அதன் பிறகு நேர்ந்த துயர சம்பவம் …!!

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு மாகடி ரோடு காவல்துறை எல்லைக்கு பாத்தியப்பட்ட பகுதியில் 44 வயதுள்ள நபர் ஒருவர், மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய படி அங்கு வசித்து வந்தார். சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து துப்புரவு தொழிலாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்த மீண்ட அவரை பணிக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கூறி அனுப்பி வைத்தனர். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து வந்துள்ளார். அதன்பின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அவர் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிவிட்டு, நண்பரை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே புறப்பட்டு அவரது நண்பர்   வீட்டுக்கு துப்புரவு தொழிலாளி சென்றுள்ளார்.

அப்போது அவரது நண்பர் வீட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதனால் நண்பர் வரும் வரை காத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டில் தனியாக இருந்த துப்புரவு தொழிலாளி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற  நண்பர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது துப்புரவு தொழிலாளி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளர். அதன்பின் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்ததும் மாகடி ரோடு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த தொழிலாளி, தனது குடும்பத்தினரிடம் தான் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறியுள்ளார். ஆனால் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால், மனம் உடைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவத்தை மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |