கேரளாவில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி, குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பேர், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர்.
மேலும் தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. அதனைத்தொடர்ந்து தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோர விபத்தில் விமானி, குழந்தை உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் சிக்கிய விமானத்தின் பைலட் 30 ஆண்டுகால அனுபவமிக்கவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது..
முதற்கட்ட விசாரணையில் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.