Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து – கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் பேச்சு..!!

கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் விமான விபத்து குறித்து கேட்டறிந்தார்.

கேரள மாநிலத்தில் துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பேர்,  10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் பயணித்துள்ளனர்..

இதையடுத்து  தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. அதனைத்தொடர்ந்து தேசிய மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கோர விமான விபத்தில் விமானி டி. எம் சாதே, குழந்தை உட்பட  15 பேர் பலியாகியுள்ளனர் என்று மலப்புரம் எஸ்பி கூறியுள்ளார்.. மேலும் 123 பேர் காயமடைந்துள்ள நிலையில் 15 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. விபத்தில் சிக்கிய விமானத்தின் பைலட் 30 ஆண்டுகால அனுபவமிக்கவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது..

முதற்கட்ட விசாரணையில் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் விமான விபத்து குறித்து கேட்டறிந்தார். முன்னதாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விபத்து குறித்து மன வருத்தத்துடன் உருக்கமாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |